பத்திரிக்கைகளில்ராசிபலன்கள் எழுதப்படுகிறது. 110 கோடி வகுத்தல் 12 ராசிகள். சராசரியாக சுமார் 9 கோடி மக்களுக்கு ஒரு ராசி. அந்த ஒரு ராசிக்கு எழுதப்படும் பொதுவானபலன் எப்படி அனைத்து மக்களுக்கும் சரியாக இருக்கும்?
தனித்தனியாக, ஜாதகங்களை வைத்து ராசி பலன்கள் மாறுமே?
ஆகவே பத்திரிக்கைகளில் வரும் ராசி பலன்களை நான் படிப்பதில்லை.
சீரியசாகவும்எடுத்துக்கொள்வதில்லை!
சில பலன்களைப் படித்தால் நக்கலடிக்கத் தோன்றும்.
Over to Kalakkal Rasi Palan ==============================================================
மேஷ ராசி
மக்களே!
ஏலேய் மக்கா, ரெண்டாவது மாடியிலிருந்து, மூனாவது மாடிக்குகுரு பெயர்ச்சி ஆகறதால, நீங்க 2ல இருந்தா 1க்கும், 1ல இருந்தா0க்கும், 0ல இருந்தா, அதான் கீழ் போர்ஷன்ல இருந்தா பூமிக்கடியிலபோய் ஒளிஞ்சிக்கோங்க!
மேலும் நீங்க இங்கிலீசுல, 'a,e,i,o,u', அப்புறம் தமிழில 'கசடதபற'லஆரம்பிக்கிற வார்த்தைகளை 126 நாள் பேசக்கூடாது. ஜோடி நெம்பர்ஒன்னோ, மானாட மயிலாடவோ மாங்கு மாங்குன்னு பார்த்தா,கல்யாணம் ஆகாதவங்களுக்குக்கூட விவாகரத்து நடக்க வாய்ப்பிருக்கு.
பரிகாரம்: ராமராஜனையோ, ஜே.கே. ரித்தீஷையோ உங்க காஸ்ட்யூம்டிசைனரா நியமிச்சு, அவங்க சொல்ற கலருல வலம் வருதல் ஷேமம்
...............................................................................................
ரிஷப ராசி மக்களே!
நீங்க அடுத்த ஆறு மாசத்துக்கு நேரா நிமிர்ந்து நடக்கக்கூடாது.98.3டிகிரி சாய்ஞ்சாப்ல நடக்கறது நல்லது. நடக்கறப்போ முக்கியமாஉங்க வலதுகாலும், இடதுகாலும் உரசவே கூடாது. அப்படிநடக்காலேன்னா என்ன ஆகும்னு கேக்கறீகளா, நடக்கக்கூடாததெல்லாம் நடந்துரும். யோகாதிபதியான குரு,பாதகாதிபதியானசனியோட வீட்டுல வலுக்கட்டாயமா தொடர்வதால, உங்க புள்ளைக்குஎந்தக் கல்லூரியில இடம் கிடைக்கலைன்னாலும், சட்டக் கல்லூரியிலயாவதுஇடம் கிடைக்கும்.
பரிகாரம்: உங்களுக்கு ஏழரை உச்சத்துல உட்கார்ந்துறதால, 'நாலரைபால்' குடிக்கிறது நல்லது.................................................................................................
மிதுன ராசி மக்களே!
எஸ்.எம்.எஸ் அனுப்பி அனுப்பியே, முடக்குவாதம் வந்த மிதுன மக்களே,அடுத்த குருபெயர்ச்சிவரை நீங்க செல்லைக் கையால தொடக்கூடாது,காதாலயும் தொடக்கூடாது.குரு ஆறுல இருந்து பாஸாகி ஏழுக்கு வந்தாலும், சனி எட்டாம்பாதத்துலயிருந்து தொடர்ந்து 'நோக்கியா'. அதனால செல்லோட யாரும்பக்கத்துல வந்தாக்கூட கல்லைக் கண்ட நாய் மாதிரி தறிகெட்டு ஓடுறது நலம்.இல்லாட்டி சனி ரிங்டோனா 'சங்கு சவுண்டை' அனுப்பி வைக்கும்.
பரிகாரம்: ரிலையன்ஸ் அம்பானிக்கு வாராவாரம் ஞாயித்துக்கிழமை நெய்விளக்கு போடணும்...................................................................................................... .
கடக ராசி மக்களே!
சன் டிவிக்கும் கலைஞர் டிவிக்கும் வித்தியாசம் தெரியாம திரியுறநீங்க,இன்னும் ஏழரை மாசத்துக்கு, டி.விப் பொட்டியில, நியூஸே பார்க்கக்கூடாது.அதுவும் அடியில் ப்ளாஷ் நியூஸ் ஓடிச்சுன்னா, தெறிச்சு தெற்குப் பக்கமாஓடுறது நல்லது.
ஏன்னா, ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் வீட்டில் குரு. உங்க ராசியோடஅஞ்சாவது வீட்டைக் குரு குத்துமதிப்பா பார்க்குறதால, மதுரைக்குப் போய்மறந்து தினகரன் வாங்கிடப் போறீங்க, கவனம்.
பரிகாரம்: டேபிள்ல குரு இருந்தாலும் வீட்டுக்குள்ள வர்ற கேபிள்லசனி இருக்கறதால,உங்க வீட்டு ரிமோட்டை உடனடியா எடுத்துட்டுப் போய்,பேங்க் லாக்கர்ல வைச்சிருங்கோ! முரசொலியில் ராசிபலன் வருகிறதா என்றுதேடிப்பாருங்கோ!..........................................................................................................
சிம்ம ராசி மக்களே!
குருவும் ராகுவும் ஒரே நேரத்துல நாலாம் பாதத்துக்கு 'Login'ஆகியிருக்கறதால, இன்னும் 222 நாளுக்கு நீங்க இமெயில் செக் பண்ணக்கூடாது.சாட் ஆகவே ஆகாது.
'orkut,
facebook' பக்கம் தலை, கை, கால் எது வைச்சும் படுக்கக்கூடாது.முக்கியமா வலைப்பதிவை கொலைவெறியோட பண்ணுறவங்க, அந்தப்பக்கமேவரக்கூடாது.
ஜூன், ஜூலை மாதத்துல குரு லாப வீட்டுல குந்தப்போறதால,மேட்ரிமோனியல்ல பதிஞ்சு வைச்சுருக்கிற கன்னிப்பசங்களுக்கு உடனடியாசஷ்டியப்த பூர்த்தி ப்ராப்திரஸ்து!
பரிகாரம்: சனிக்கிழமைதோறும் இட்லிவடையைத் தேடிக் கண்டுபிடிச்சுவடைமாலை சாத்தறது உத்தமம்...............................................................................................................
கன்னி ராசி மக்களே!
ஹைக்கூ.. பைக்கூ.. கொக்கரக்கூ.. இப்படி எந்தவித கவிதைகளையும்உங்க வாழ்க்கையில நீங்க இன்னும் அரை வருசத்துக்கு நுழையவிடக்கூடாது.வைரமுத்து, வாலி வகையறாக்களை பாத்தா உங்க வாய் 'வாய்தா' வாங்கிட்டுபோயிடறது நல்லது.
முக்கியமா பின்நவீனத்துவக்காரங்ககிட்ட முன்னெச்சரிக்கையா இருக்கறதுநல்லது. இதையெல்லாம் மீறி நீங்க காதல் கவிதை படிச்சீங்கன்னா, குருவேதடுத்தாலும் உங்க கண்ணை 'சனி பகவானோட' காக்கா வந்து கொத்திரும்.........................................................................................................................
என்னுரை:
இதற்குப் பரிகாரம் எழுதி, அடுத்து உள்ள ஆறு ராசிகளுக்கும்பலன் எழுதுவதற்குள், அந்த ஜோதிடர் கடத்தப் பட்டுள்ளதாக அறிகிறேன் திருமங்கலம் இடைத்தேர்தல் குறித்து அவர் எழுதிய கலக்கல் பலனில்கோபமுற்ற சில கட்சிக்காரர்கள் சேர்ந்து அவரைக் கடத்திக் கொண்டு போய் விட்டதாகத் தெரிய வருகிறது.
This is purely for fun purpose :) not to hurt any particular person or any group